Dec 21, 2008

ஒரு கொடிய நொடி
அவளோடு மொபைலில்
பேசி கொண்டியிருக்கையில்,
காதல் தோல்வியால்
சாவதற்கு முன்
என்னோடு பேச முயன்ற
என் நண்பனின்
அழைப்பை துண்டித்து,
தொடர்ந்து அவளோடே
பேசிக்கொண்டே இருந்து
நண்பனை இழந்தது ..
நஷ்டம் காதலில்... லாபக் கணக்குகளை போட்டு முடிப்பதற்குள் நஷ்டம் வந்து விடுகிறது காதலில்.. நேற்றைய அவளின் சிரிப்பை முழுவதுமாய் ரசித்து முடிக்கும் முன் இன்று முறைத்து விட்டு போகிறாள்.. சந்தோஷ கனவுகளை கவிதை ஆக்குவதற்குள் சோகத்தை என் முன் கொட்டி விட்டு போய் விடுகிறாள் .....
மரணம் சம்பவிக்கும் ....
சாலையோர செடிகளுக்கு எந்த நேரமும் மரணம் சம்பவிக்கும் ஒரு புது க்ளீனர் லாரியை ஓட்டி பயிலும் போது.....
வரமா...? சாபமா...? கள்ளி செடிகளில் உன் பெயர் எழுதுகையில் வழிந்த விஷப்பால் தந்த வரமா...? இல்லை சாபமா...? தெரியவில்லை.... இன்னமும் எனக்குள் உந்தன் நினைவுகள்.....
கயிறு மட்டுமே...
நான் கடைசியாய்
ஒருமுறை
அவள் பெயரை
உச்சரிப்பதை
என் கழுத்தை இறுக்கும்
கயிறு மட்டுமே
அறிந்திருக்கும்
அதற்கு யாரும்
சாட்சி இல்லை.....
ஜன்னலையும் காணவில்லை.....
தினமும் காலையில்
சுவரின் ஓட்டை வழியாக
வந்து கொண்டு இருந்த
சூரிய ஓளியை காணவில்லை.....
. பத்தாவது படிக்கும் போது
டூரில் வாங்கிய சீப்பு
நான்கு வருடத்திற்கு
பிறகு காணவில்லை.....
.
ரொம்ப நாளாக
காரணமே இல்லாமல்
வைத்திருந்த ஆனந்த விகடனும்
கூட காணவில்லை.....
.
ஏழாம் வகுப்பில்
ஒருமுறை ஆங்கிலத்தில்
நிறைய மதிப்பெண் எடுத்த
பேப்பரை காணவில்லை.....
.
எழுதி கொடுக்காமலே
மறைத்து வைத்திருந்த
ஒரு காதல் கடிதமும்
காணவில்லை.....
.
இன்னும் நிறைய
காணவில்லை,
பழைய வீட்டிலிருந்து
புது வீட்டிற்கு வந்ததால்....
இவற்றையெல்லாம் விட
.
உன்னை உன்
பதினாறு வயதிலிருந்து
எனக்கு அழகாய் காட்டிய
அந்த ஜன்னலையும்
காணவில்லை.....